1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:21 IST)

டிஸ்சார்ஜ் ஆனதும் கொடநாடு போக ஆடர் போட்ட ஜெ.: சசி திடுக்கிடும் தகவல்!

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் கொடநாடு போக வேண்டும் என ஜெயலலிதா கூடியதாக சசிகலா தகவல். 

 
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது ஜெயலலிதா எவ்வாறு இருந்தார் என சசிகலா கூறியுள்ளார்,. இந்த தவல் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியாகியுள்ளது. 
 
அதில், டிசம்பர் 19, 2016 அன்று மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக இருந்தது. டிஸ்சார்ஜ் ஆனதும் போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடித்தோம். ஆனால், நேராக கொடநாடுதான் போக வேண்டும் என அம்மா கூறினார். 
 
மருத்துவர்கள் அங்கு போவது சரியில்லை ஒரு மாதம் சென்னையில் இருந்துவிட்டு பின்னர் செல்லுங்க என கூறிய போது நான் தான் இங்கு பாஸ் என கூறி கொடநாடு போவதில் உறுதியாய் இருந்தார் என கூறப்பட்டிருக்கிறது. 
 
தற்போது கொடநாடு வழக்கு தமிழகத்தில் ஜரூர் வேகத்தில் நடைபெறும் நிலையில் சசிகலா, அம்மா கொடநாடு போக வேண்டும் என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.