1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (13:04 IST)

ஜெ.வை சசிகலா எப்போது வீடியோ எடுத்தார் தெரியுமா ? - தினகரன் பேட்டி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
சில நாட்களுக்கு முன்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஜெயலலிதாவை சந்திக்க வருபவர்கள் அனைவரும் ஜெயலலிதா இருக்கும் அறைக்கே செல்லவில்லை. யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா அறைக்கு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே செல்ல முடிந்தது. 
 
ஒருவேளை ஜெயலலிதாவை நாங்கள் நேரில் சந்தித்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என அவர் சொல்லிவிடுவார் என யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், அவரை நாங்கள் பார்த்தோம் என பொய் கூறினோம். அது உண்மையல்ல என கூறினார். 
 
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி வீடியோ இருப்பதாகவும், அதனை சசிகலாவின் அனுமதியை பெற்று வெளியிடுவது குறித்து முடிவு செய்வோம் எனவும் கூறி பரபரப்பை மேலும் கொஞ்சம் கூட்டினார். 
 
ஜெ. மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் உள்ளது. சசிகலா எடுத்த வீடியோ பதிவுதான் எங்களிடம் உள்ளது. 
 
ஜெயலலிதா ஐசியு வார்டில் இருந்து, பொது வார்டுக்கு மாற்றப்பட்ட போதுதான் சசிகலா அவரை வீடியோ எடுத்தார். அதுவும் ஜெ.வின் சம்மதத்தின் பேரிலேயே அந்த வீடியோ எடுக்கப்பட்டது. அப்போது அவர் உடல் எடை குறைந்து, நைட்டி உடையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். எனவேதான், அதை வெளியிடவில்லை.