வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (09:52 IST)

தினகரனை சத்தியம் செய்ய சொல்லுங்கள் - தீபக் காட்டம்

மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது டிடிவி தினகரன் அங்கு வரவே இல்லை என ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் பேட்டியளித்துள்ளார்.


 

 
உடல்நலக்குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவரை சந்திக்க சசிகலா தரப்பு ஆளுநர், அமைச்சர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காததே அதற்கு காரணமாகும். 
 
தற்போது அவரின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. 
 
இந்நிலையில், ஜெ.வின் அண்ணன் மகள் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


 

 
எனது அத்தை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது டிடிவி தினகரன் அங்கு வரவேயில்லை. அப்படி அவர் வந்தாரா இல்லையா என அவரின் மகளின் மீது சத்தியம் செய்து அவரை கூறச் சொல்லுங்கள். அவர் கையில் ஆட்சி சென்று விடக்கூடாது.
 
சசிகலா செங்கோட்டையனைத்தான் முதல்வராக்க நினைத்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியை சட்டை பிடித்து இழுத்து வந்து தினகரன் முதல்வராக்கினார். 
 
தற்போது நடைபெற்று வரும் ஆட்சி ஜெயலலிதா ஆட்சிதான். அது கவிழக்கூடாது. ஜெ.வின் மரணம் தொடர்பான நீதி விசாரணையை ஏற்கிறேன்” என அவர் தெரிவித்தார்.