1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamiladu rain chances in following days

இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா தடுப்பூசியால் வயிற்றில் ரத்தம் உறையுமா? இரு சம்பவங்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்