செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (23:35 IST)

சசிகலா பிறந்தநாள்...குவியும் வாழ்த்துகள்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்று 4 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் விடுதலை ஆனார். அவரை முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் சந்தித்தனர்.

இதையடுத்து அவ்வப்போது அதிமுக முக்கிய பிரமுகர்களுடன் சசிகலா போனில் பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது.  அதேபோல் ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும் அவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில்  சசிகலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள  மெர்ஸி ஹோம் சொசைட்டி ஆப் மேரி இமாகுலேட் முதியோர் இல்லத்தில் இன்று கிருஸ்துமஸ் விழா கொண்டாடினார்.

இதில் பங்கேற்ற சசிகலா அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், முதியோர்கள் 150 பேருக்கு அவர் உணவு வழங்கினார்.

 இ ந் நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் விரைவில் அவர் அரசியல் குறித்து அறிவிப்புகள் வெளியிடுவார் என எதிர்பார்த்துள்ளனர்.    நாளை  அவரது பிறந்த  நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் இணையதளத்தில் அவரது ஹேஸ்டேக் பதிவிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 இந்தி சினிமாவில் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட்டின் முன்னணி  நடிகை மற்றும் நடிகர் ரன்வீர் கபூரின் மனைவியாவார்.