1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala released this month from bangalore jail?

இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலையா? வழக்கறிஞர் தகவல்!

சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விரைவில் விடுதலை அடைவார் என்றும் அவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே விடுதலை பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இதுகுறித்து கூறிய போது இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சிறை நன்னடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற தகுதி பெற்று விட்டார் என்றும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவார் என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அதிமுக அமைச்சர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் கருத்து மோதலில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவின் நிலை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக இருந்தது 
 
ஒட்டுமொத்த அமைச்சர்களும் சசிகலாவின் தலைமையை ஏற்று ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் கழட்டி விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
About Writer
siva