செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (20:12 IST)

சசிகலாவின் ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம் !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் அக்ரகார சிறையில் கைதியாக உள்ளார்.

இந்நிலையில், சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அவருக்குச் சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 2003 முதல் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்தில் வாங்கப்பட்ட சொத்துகளும் முடக்கப்பட்டன.