திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (09:00 IST)

சசிகலா விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் காங்.?

நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று காங். கோரியுள்ளனர்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் உறவினருமான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் அக்ரகார சிறையில் கைதியாக உள்ளார். சமீபத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. 
 
அதாவது ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவரது விடுதலை குறித்து அவ்வப்போது தகால் வெளியாகி வருகிறது. 
 
இதனிடையே சசிகலா விடுதலைக்கு எதிராக காங். தரப்பில் அம்மாநில முதல்வருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விதிமுறைகளை மீறிச் சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக 2017ஆம் ஆண்டு அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். 
 
இந்த சிறப்பு சலுகைகளை பெற, பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அந்த குழு இன்னும் விசாரணை அறிக்கையை வழங்காத நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என்று கோரியுள்ளனர்.