திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (13:37 IST)

ரஞ்சித்துக்கு முக்கியப் பதவிக் கொடுத்த டிடிவி தினகரன் !

அமமுக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளராக நடிகர் ரஞ்சித்தை நியமித்துள்ளார் டிடிவி தினகரன்.

கடந்த ஆண்டு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்ககட்சியில் இணைந்தார் பிரபல நடிகர் ரஞ்சித். இந்நிலையில் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, அக்கட்சியிலிருந்து விலகிய அவர், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 27-ந் தேதி   அமமுக கட்சியில் இணைந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அமமுகவில் இருந்தும் அவர் விலகப்போவதாக செய்திகள் வெளியான நிலையில் அவரை சமாதானம் செய்யும் விதமாக டிடிவி தினகரன் அவருக்கு அமமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார். மேலும் அமைப்புச் செயலாளராக திருவான்மியூர் முருகனும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சியும், மாணவரணிச் செயலாளராக அண்ணா நகர் பரணீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.