வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (19:22 IST)

தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சசிகலா புஷ்பா

தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சசிகலா புஷ்பா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை, அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தே வெற்றி பெற்றார் மற்ற கட்சியைச் சேர்ந்தவர் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என கூறி வந்த அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தற்போது தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சத்திப்பு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.