செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (18:52 IST)

தொழிலதிபரை மிரட்டிய அதிமுக அமைச்சர்

கரூரில் அமைச்சர் கொடுத்த டார்ச்சரால், மன உளைச்சலில் இருந்த ஒப்பந்ததாரர் 3 நாட்களாக காணவில்லை என்றும் இதனால் மர்மம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கரூர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலெக்ட்ரேட்டில் நடைபெற்ற நபார்டு திட்டத்தின் டெண்டரில் ஆன்லைன் மூலம் பதிவு பெற்று டெண்டரில் பங்கேற்றார். 
 
அவரிடம் அந்த பணியை வாபஸ் பெறும்படி அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று நாட்களாக சங்கர் ஆனந்தை காணவில்லை.