புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (15:38 IST)

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு... செல்லாத நோட்டை வைத்து வளைத்து போட்ட சொத்து!

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் குறித்த விவரங்களும் தற்போது வெளிவந்துள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது மக்கள் தங்களது பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சமயத்தில் சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
 
ஆம், சுமார் ரூ.1,500 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் சசிகலா. இந்த சொத்துக்கள் அனைத்தும் நிறுவனங்களாக வாங்கப்பட்டது. சசிகலா மொத்தம் 7 நிறுவனங்களை வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், கோவையில் செந்தில் பேப்பர் போர்டு, கோவையில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஆகியவை சசிகலா வாங்கிய நிறுவனங்களில் பெயர் இந்த லிஸ்டில் அடிபடுகிறது. 
 
மேலும், ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிகாரிகளால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.