சசிகலாவை ஏமாற்றி பிழைக்கும் தினகரன்? அதிமுக அமைச்சர் பொளேர்!
சசிகலாவை டிடிவி தினகரன் ஏமாற்றி கொண்டிருக்கிறார் என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தினகரன் குறித்தும் அமமுகவை குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, அமமுக ஒரு கட்சியல்ல. அது ஒரு குழு. அங்கு யாரும் இருக்கமாட்டார்கள்.
டிடிவி.தினகரனின் கூடாரம் காலியாக உள்ளது. அவர் ஒரு கலப்படவாத அரசியல்வாதி. அவர் சசிகலாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதை தெரிந்து அமமுகவில் இருந்து, அனைவரும் விலகி வருகின்றனர். இனி தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மட்டுமே போட்டி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.