வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:05 IST)

திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயமே! – சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர்!

கோவில்பட்டியில் சசிகலாவுக்கு ஆதரவாக அப்பகுதி அதிமுகவினர் சிலர் ஒட்டியதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்து விடுதலையானது முதலாக பல அதிமுகவினர் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வருவதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

மேலும் கடந்த சில மாதங்களாக சசிக்கலா அதிமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் சிலரோடு தொலைபேசியில் பேசி வருவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டியில் சசிக்கலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயமே! அஇஅதிமுகவின் மூன்றாவது தலைமுறையே.. கழகத்தின் நிரந்தர பொது செயலாளரே” என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.