புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (12:11 IST)

ஆட்சியை கலைக்க ரூ.5000 கோடி - தினகரனுக்கு சசிகலா கொடுத்த அசைன்மெண்ட்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியை கலைக்க வேண்டும் என டிடிவி தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலா பரோலில் வந்த போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்றுவது பற்றி தீவிர ஆலோசனை நடந்தததாக அப்போதே செய்திகள் வெளியானது.
 
திவாகரனிடம் பேசிய சசிகலா, கட்சி நம்ம கைக்கு வரணும், அதுதான் முக்கியம். நீயும் தினகரனும் ஒற்றுமையா இருந்து செயல்படுங்க. நீயும், தினகரனும் ஒத்துமையா இருந்தாதான், கட்சியை நாம கைப்பத்த முடியும். இந்த ஆட்சி போனாலும் கட்சி நம்ம கைக்கு வரணும் என கூறியதாக செய்திகள் வெளியானது.
 
அதேபோல் டிடிவி தினகரனிடம் பேசிய சசிகலா “ இந்த ஆட்சி கலைய வேண்டும். இரட்டை இலை எடப்பாடி பக்கம் சென்று விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இரட்டை இலை இருக்கும் அணியின் பக்கமே தொண்டர்கள் இருப்பார்கள். 
 
துரோகிகளின் ஆட்சி நிலைக்கக் கூடாது. அதற்கு எம்.எல்.ஏக்கள் எத்தனை கோடி கேட்டாலும் கொடுங்கள். 5 ஆயிரம் கோடி செலவானாலும் பரவாயில்லை” எனக் கூறியதாக சில செய்திகள் வெளிவந்துள்ளது.