ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (10:54 IST)

சசிகலா கும்பலை ஒழிப்போம்: பழனிச்சாமி-பன்னீர் கூட்டாக சபதம்

ஓபிஎஸ் அணி மற்றும் ஈபிஎஸ் அணி இணைந்தபோதிலும் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு புகைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டு வந்தாலும் சசிகலா, தினகரன் கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையில் இருவருமே ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர். இருவருக்குமே பொது எதிரி திமுக என்பதையும் தாண்டி தற்போது சசிகலா குடும்பத்தினர்கள் தான் இருந்து வருவதால் தான் இந்த ஒற்றுமை



 
 
இந்த நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை ஒன்றில், 'ஜெயலலிதா கட்டிக்காத்த அரசை கலைக்க முற்பட்டு நயவஞ்சக நாடகமாடும் சசியின் சதிக்கும்பலை ஒழிப்போம் என்று சபதம் செய்துள்ளனர்.
 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நமக்கு அளித்துள்ள ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தை யாராலும் வீழ்த்தவோ, எதிர்த்து நிற்கவோ முடியாது என்றும், அதிமுகவை எதிர்க்கும் தனி மனிதனோ இயக்கமோ இன்னும் தோன்றவில்லை என்றும் அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.