திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (11:40 IST)

ஆட்சி கவிழ்ந்தாலும், கட்சி நம் கைக்கு வரணும்: திவாகரனுக்கு சசிகலா போதனை!!

கடந்த வாரம் தனது கணவரின் உடல் நிலையை பார்க்க சிறையில் இருந்த வெளிவந்தார் சசிகலா. அப்போது சில மறைமுக அரசியல் போதனையை திவாகரனுக்கு வழங்கினாராம். 


 
 
சசிகலா பரோலில் வந்த போது அவரது சகோதரர் திவாகரனுக்கு உடல் நிலை சரியில்லாததால் இருவரும் சந்திக்கவில்லை என கூறப்பட்டது. 
 
ஆனால், திவாகரன் சிகிச்சை எடுப்பதற்காக சென்னை குளோபல் மருத்துவனமைக்கு வந்துள்ளார். இவ்வளது தூரம் வந்துவிட்டு நடராஜனை பார்க்காமல் போனால் மரியாதையாக இருக்காது என எண்ணி அவரை சந்தித்துள்ளார். 
 
அதன் பின்னர் சசிகலா வருவதை அறிந்து அவரை பாக்க காத்திருந்துருக்கிறார். சசிகலா தன் கணவரை பார்த்து பேசிவிட்டு  திவாகரனை பார்த்து உடல்நலம் விசாரித்திருக்கிறார். 
 
சசிகலா திவாகரனை சந்தித்த போது திவாகருடைய மகன் ஜெய் ஆனந்த் மட்டும் அருகில் இருந்திருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் சசிகலா திவாகரனுக்கு சில அரசியல் போதனைகளை வழங்கினாராம்.
 
சசிகலா கூறியதாவது, கட்சி நம்ம கைக்கு வரணும், அதுதான் முக்கியம். நீயும் தினகரனும் ஒற்றுமையா இருந்து செயல்படுங்க. நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா இருந்தாதான், கட்சியை நாம கைப்பத்த முடியும். இந்த ஆட்சி போனாலும் கட்சி நம்ம கைக்கு வரணும் என கூறினாராம். 
 
இந்த சந்திப்பை பற்றி அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என்றாலும் காற்றோடு காற்றாக பரவுகிறது இந்த தகவல். அரசியலில் நிதர்சன உண்மை என்று ஏதுமில்லை அல்லாவா....