1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 18 நவம்பர் 2017 (11:16 IST)

ஜெ. கரை படியாத கரம் கொண்டவர் ; ரெய்டுக்கு சசிகலாவே காரணம் : ஜெயக்குமார் புது விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு சசிகலாவே காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சசிகலா தங்கியிருந்த அறையில் மட்டும் மொத்தம் 10 அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. முடிவில், 2 லேப்டாப்,  பென் டிரைவ், ஜெ.விற்கு வந்த சில அரசியல் கடிதங்கள் மற்றும் சில ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் “அம்மா வீட்டில் சோதனை நடத்தியது மிகுந்த வேதனை அளிக்கிறது. அம்மா கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்.  அம்மா இறந்த பிறகு சசிகலா அந்த வீட்டில் வாழ்ந்ததே இந்த சோதனைகளுக்கு காரணம். இதில் அரசியல் எதுவுமில்லை. தேவையில்லாமல் இந்த விவகாரத்த திசை திருப்புகிறார்கள்” எனக் கூறினார்.

அதேபோல், இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டப்படியே இந்த சோதனை நடைபெற்றுள்ளது எனக்கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.