சிறையில் சசிகலாவுக்கு வேலை ரெடி: சம்பளம் தினமும் ரூ.50


bala| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:56 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளார் சசிகலா. இவருடன் இளவரசியும் சென்றுள்ளார். சுதாகரன் தனியாக பெங்களூர் சென்றுள்ளார்.

 

பொதுவாக தண்டனை கைதிகளுக்கு சிறைச்சாலையில் ஏதாவது வேலை ஒன்று வழங்கப்படும். அதற்கு ஊதியமும் சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். ஆனால் இந்த ஊதியத்தை உடனடியாக பெற முடியாது. தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது வழங்கப்படும்.

இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு பெண்கள் செய்யக்கூடிய வகையில் ஊதுபத்தி உருட்டுவது உட்பட 3 வகை வேலைகள் மாறி மாறி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக தினசரி ரூ. 50 ஊதியம் கொடுக்கப்படும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையும் வழங்கப்படும் என தெரிகிறது.

 


இதில் மேலும் படிக்கவும் :