வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (12:31 IST)

தீவிர கண்காணிப்பில் சசிகலா; எடப்பாடி பழனிச்சாமி: உளவுத்துறை ரொம்ப பிஸி!

தீவிர கண்காணிப்பில் சசிகலா; எடப்பாடி பழனிச்சாமி: உளவுத்துறை ரொம்ப பிஸி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை தமிழக உளவுத்துறை மூலமாக கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய உளவுத்துறை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
சசிகலா பரோலில் வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச முயற்சிப்பார் என கூறியிருந்தோம். அதே போல இளவரசியின் மகன் விவேக் மூலம் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி பலனற்றதாய் போனது.
 
எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் போனுக்கு கால் செய்த விவேக் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியிடம் பேச வேண்டும் போனை முதல்வரிடம் கொடுங்கள் என கூறினார். இந்த தகவல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் போனை வாங்காமல் அவரிடம் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
 
இதனையடுத்து கணவரை சந்திக்க சசிகலா செல்லும் போது அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை மூலம் சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக கண்காணித்து வருகிறாராம். அதே நேரத்தில் சசிகலாவுடன் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்ததற்கு முக்கிய காரணம் ஒன்று சொல்லப்படுகிறது.
 
சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி மாநில உளவுத்துறை மூலம் கண்காணித்து வருவது போல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் தொடர்பில் உள்ளாரா என்பதை மத்திய உளவுத்துறையும் கண்காணிக்கலாம் என கூறப்படுகிறது. அதனாலே அவர் சசிகலாவிடம் பேசுவதை நிராகரித்திருக்கலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.