சசிகலாவிடம் இருந்து போன் கால்: பேசாமல் தவிர்த்த எடப்பாடி பழனிச்சாமி!

சசிகலாவிடம் இருந்து போன் கால்: பேசாமல் தவிர்த்த எடப்பாடி பழனிச்சாமி!


Caston| Last Updated: திங்கள், 9 அக்டோபர் 2017 (12:06 IST)
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள தனது கணவர் நடராஜனை சந்திக்க பெங்களூர் சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலா முதல்வர் எடப்பாடியுடன் போனில் பேச முயற்சித்ததாகவும், ஆனால் அவர் பேசவில்லை எனவும் தகவல்கள் வருகின்றன.

 
 
மருத்துவமனையில் தனது கணவர் நடராஜனை சந்திக்க வரும் சசிகலாவை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது. மருத்துவமனையில் சில மணி நேரங்கள் இருந்துவிட்டு டி நகரில் உள்ள இளவரசியின் வீட்டுக்கு செல்கிறார் சசிகலா.
 
இந்நிலையில் சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளருக்கு இளவரசியின் மகன் விவேக் போன் செய்து எடப்பாடி பழனிச்சாமியிடம் சசிகலா பேச வேண்டும், போனை முதல்வரிடம் கொடுங்கள் என கூறியிருக்கிறார்.
 
முதல்வரின் உதவியாளர் தகவலை முதல்வரிடம் கூற அவர் போனை வாங்கவே இல்லையாம். விவேக் இரண்டு மூன்று முறை பேச முயற்சித்தும் எடப்பாடி பழனிச்சாமி அதனை தவிர்த்திருக்கிறார். இதனையடுத்து சசிகலாவை யார் யார் எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த தகவல் தான் தற்போது அதிமுக வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :