செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (16:32 IST)

ராமர் கோயில் திறப்புவிழா: சென்னையில் இருந்து சீதைக்கு செல்லும் வாழை நார் சேலை..!

ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து சீதைக்கு வாழைநார்  சேலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை அருகே உள்ள அனகாபுத்தூரில் சீதைக்காக வாழை நாரில் புடவை தயார் செய்து அனுப்பப்படாத திட்டமிட்டுள்ளது. பத்து நாட்களாக இரவு பகல் பாராமல் இந்த புடவையை நெசவாளர்கள் செய்து வருகின்றனர். 
 
நான்கு அடி அகலம் மற்றும் 20 அடி நீளம் கொண்ட இந்த புடவை, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்கம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த புடவை தான் ராமர் கோவில் திறப்பு விழா அன்று சீதாதேவிக்கு சாத்தப்படும் என்று கூறப்படுகிறது. 
 
25 வகையான இயற்கை  நார் கொண்டு, இயற்கையான சாயங்களை கொண்டு இந்த புடவை  தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மஞ்சள் மற்றும் இண்டிகோ நிறத்தில் இந்த புடவை இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran