1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (18:41 IST)

மோடி வெளிநாடு பயணங்களில் பிஸியாக இருப்பதினால் காவிரியை கண்டு கொள்ளவில்லையா?: சரத்குமார் கேள்வி

கரூர் மாவட்டத்தில், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், நடிகரும், அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேட்டூரிலிரிந்து மயிலாடுதுறை வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கரூரை அடுத்த நொய்யல் குறுக்கு சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியபோது,



காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்திய அரசு ஏன் காலதாமதப்படுத்துகிறது என தெரியவில்லை. மோடி வெளிநாடு பயணங்களில் பிஸியாக இருப்பதால் காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லையா? என கேள்வி எழுப்பிய சரத்குமார், காவிரி பிரச்னை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். காவிரி மேலாண்மை அமைக்க அழுத்தம் கொடுக்க இதுவே சரியான தருணம் என்றார்.

மக்களவை உறுப்பினர்கள் ராஜினமா செய்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இது தவிர வேறு வழியில்லை. மத்திய அரசின் செயல்பாடுகள் இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்ற அவர், காவிரி மேலாண்மை பாரியம் அமைக்கும் விவகாரத்தில் 9-பேர் கொண்ட குழு அமைத்திருக்கும் மத்திய அரசின் செயல் காலதாமதபடுத்தும் நோக்கமேயாகும்.


 
உலகநாடுகளில் எல்லாம் நதிநீர் பங்கீட்டில் சுமூகமான நிலைப்பாடு கொண்டு செயல்படுத்தும் போது இந்தியாவில் உள்ள குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் ஒன்றுபடாதது ஏன் ?. காவிரி நதி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பெற பல வருடங்களாக போராடி வருகிறோம்.நீதி மன்றத்தில் பல வருடங்களாக சட்ட போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் தீர்பளித்தும் அதனை மதிக்காமல் மத்திய அரசு காலம் கடத்துவது வருத்தமளிக்கிறது. அமேசான்நதி,சிந்துநதி,போன்ற நதிகளை கூட நாடுகள் பங்கீடு செய்து கொள்கின்றன. பலகட்ட போராட்டங்கள் நடத்தியும்,தமிழகம் காய்ந்து விட்ட சூழலிலும் இப்போது மத்திய அரசை வலியுருத்த அழுத்தம் கொடுப்பதற்கு மக்களவை, மேலவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தமிழகத்தின் உரிமைகளை மீட்க அழுத்தம் கொடுப்பது கட்டாயம்.இதை தவிர மத்திய அரசிற்கு வேறென்ன அழுத்தம் கொடுக்க முடியும் என்றார்.

சி.ஆனந்தகுமார் கரூர்