செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (11:34 IST)

மோடியை விமர்சித்த பிரபல பாஜக தலைவர்

பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை,  பாரதிய ஜனதா அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.
 
சமீபத்தில் டெல்லியில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் பாரதிய ஜனதா அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்ஹா பேசியபோது, பாஜக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வரித்துறை அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்து கொண்டதை வரி பயங்கரவாதம் என்று கூறினார்கள். ஆனால்,  2016-ம் ஆண்டு பாஜக அரசு பணமதிப்பிழப்பு செயல்பாட்டை அமல்படுத்தி வரி பயங்கரவாதத்துக்கு வித்திட்டது. இதனால் வருமான வரித்துறை 18 லட்சம் வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்க வருமான வரித்துறைக்கு போதிய வசதிகள் உள்ளதா? இந்த வழக்குகள் விசாரணை முடிய எத்தனை ஆண்டுகள் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.
 
மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 16-ஆம் நூற்றாண்டில் வாழந்த அரசர் ஒருவர் அமல்படுத்தி தவறு செய்தார். அதே தவரை 500 ஆண்டுகள் கழித்து மோடி செய்துள்ளார் என்று கூறினார்.