1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (20:47 IST)

சர்ச்சையை ஏற்படுத்திய மகா கணபதி பாடல்; விளக்கம் கொடுத்த சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
இன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் சமஸ்கிருத பாடலான மகா கணபதி ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் ஐஐடியில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பாடல் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்கு காரணம் விழாவில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டதுதான்.
 
பாஜக சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டதால் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து ஐஐடி தரப்பில் கூறப்பட்டதாவது:-
 
இங்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இருப்பதால் விழாவில் ஒலிக்கப்படும் பாடல்களை மாணவர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள். இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அதில் மட்டும் எப்போதும் மற்றமில்லை என்று இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளனர்.