செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (18:05 IST)

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் பெண் சடலம் மீட்பு....

சென்னை ஐஐடி வளாகத்தில் இறந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கிண்டியில் உள்ள ஐஐடி வளாகம், அதிகம் பாதுகாப்புள்ள பகுதியாகும். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு,  அங்குள்ள பிரம்மபுத்ரா மானவர் விடுதி பின்புறம், 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 
 
அந்த பெண் யார்? அவர் எப்படி அங்கு வந்தார்? என்பது பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அவரின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து போலீசார் அவரை பற்றிய தகவல்களை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
அதிக பாதுகாப்புள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.