1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sankaran koil bike showroom fired

சங்கரன் கோவில் பைக் ஷோரூமில் தீவிபத்து… பைக்குகள் எரிந்து சேதம்!

சங்கரன் கோவில்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள பைக் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பைக்குகள் எரிந்து சேதமாகியுள்ளன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருவேங்கடம் கனகவேல் என்பவர் இருசக்கர வாகனங்களுக்கான ஷோரூம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இங்கு பைக்குகள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் காலை 6.30 மணி அளவில் பைக் விற்பனை மையத்தில் உள்ளே இருந்து புகை வெளியே வர ஆரம்பித்துள்ளது.

இதைப்பார்த்த சிலர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்க உடனடியாக தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பைக்குள் சேதமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.