திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (20:24 IST)

தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் - கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து - முதல்வர் ஸ்டாலின்..!

MK Stalin
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

 
கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு என்றும் நான் மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.