ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (19:22 IST)

GOAT TRAILER UPDATE..! நாளை முறையான அறிவிப்பு.! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.!!

Goat
GOAT படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், நாளை முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது படத்தின் போஸ்டர் வெளியானபோதே தெரிந்தது. தில் விஜய் முன்று பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியானது. இந்த இரண்டு பாடல்களிலும் விஜய் பாடியுள்ளார். படத்தின் மூன்றாவது பாடலும் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. படம் ஐமேக்ஸ் திரையில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 
 
மேலும் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்டது. அதற்கு, படம் ரிலீஸ் ஆவதற்கு 10 முதல் 15 நாட்களுக்குள் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதிகள் குறித்து அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் என்ற அப்டேட் மட்டும் இதுவரை வெளியாகமல் இருப்பதால் ரசிகர்கள் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டு உள்ளனர்.

 
இந்நிலையில் GOAT தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உங்களுக்காக ஒரு அற்புதமான டிரெய்லரை நாங்கள் தயார் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.  எனவே தயவு செய்து அமைதியாக இருங்கள் மற்றும் எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்றும் நாளை உங்களுக்கு சரியான புதுப்பிப்பைத் தருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.