ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (13:58 IST)

ஆக.13-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை..! முதல்வரின் அமெரிக்கா பயணத்திற்கு ஒப்புதல்..!!

assembly
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெற உள்ளது.
 
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் முதல்வர் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 11 மணிக்கு  தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. 


முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை  ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.