1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. salem police order to submit the necessary documents

இதெல்லாம் கொண்டு வாங்க!.. போலீஸ் செக்!.. சேலத்தில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!..

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வந்தார். அப்படி அவர் கருவூருக்கு சென்றிருந்தபோது 41 பேர் உயிரிழந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டார். அதன்பின்   ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மட்டும் விஜய் பேசினார். இந்நிலையில், வருகிற 13ஆம் தேதி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியிலும், சீலநாயக்கன்பட்டியிலும் கூட்டம் நடத்த தவெக சார்பில் அனுமதி கேட்டு காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே கூட்டம் நடக்கும் இடத்தை போலீசார்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.எத்தனை பேர் வருவார்கள்? அவர்களுக்கு மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதா? வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடம் இருக்கிறதா?  குடிநீர் வாசி செய்யப்பட்டிருக்கிறதா/ என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் தெளிவான பதிலை விண்ணபத்தில் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அரசியல்கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் கூறியுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்..

ஆனால் தவெகவினர் வெறும் மனுவை மட்டுமே நிரப்பி காவல் நிலையத்தில் கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த மனுவை போலீசார் திருப்பி கொடுத்துவிட்டனர். மேலும் தேவையான ஆவணங்களை குறிப்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலில் கூறிய ஆவணங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நீயா நானா பாத்துடலாம்!.. விஜய் தொகுதியில் போட்டியிட திமுக திட்டம்?....