சேலத்தில் நாம் தமிழர் பிரமுகர் வெட்டிக் கொலை – ரேசன் அரிசி கடத்தலால் நிகழ்ந்த கொடூரம்!

Last Updated: புதன், 23 டிசம்பர் 2020 (11:14 IST)

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் செல்லத்துரை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் மீது குண்டர் சட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் பெற்று இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வெளியே வந்துள்ளார். நேற்று இரவு 7 மணிக்கு செல்லதுரை தனது வழக்கறிஞரை பார்க்க காரில் சென்றிருக்கிறார்.

அப்போது அவரது காரை முன்னும் பின்னும் இடித்து தள்ளியுள்ளன இரு கார்கள். இதனால் பதற்றமான அவர் அங்கிருந்து தப்பிக்க முயல அவரை துரத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைத்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் போலிஸார் அரிசி கடத்தல் தகராறில் முன்பகை இருந்த ஜான் என்பவர்தான் கொலை செய்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :