வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (15:36 IST)

சித்ரா மரணத்தில் என்னை ஏன் இழுக்கிறீர்கள் – ஆதங்கத்தில் விஜய் டிவி தொகுப்பாளர்!

சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது சமூகவலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சின்னத்திரை நடிகர்கள் இதுபோல தற்கொலை செய்துகொள்வது கவலையளிக்கும் விதமாக உள்ளது. இப்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் சந்தேகத்தின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சித்ராவோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மற்றொரு ஆண் தொகுப்பாளர், அவரை சில வீடியோக்கள் வைத்து மிரட்டியதாகவும், அதனால்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அதை அந்த தொகுப்பாளர் மறுத்துள்ளார். தங்கள் இருவருக்கும் இடையே இருந்தது நட்புதான் என்றும் தனக்காக அவர் சில வெளிநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளைப் பெற்றுத்தந்துள்ளார் எனக் கூறியுள்ளார். மேலும் தான் ஊடகத்துக்கு வருவதற்கு முன்னரே தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.