வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (11:53 IST)

நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர்! – சேலத்தில் பரபரப்பு

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியை அலுவலக உதவியாளர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதியாக பணியாற்றி வருபவர் பொன்பாண்டி. நீதிமன்ற வளாகத்தில் பொன்பாண்டி வந்தபோது நீதிமன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் பொன்பாண்டியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் கத்தியதால் தாக்கியதால் சிறிய அளவில் பொன்பாண்டிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரகாசை அஸ்தம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்ததில், பிரகாஷின் பணியிட மாறுதலுக்கு பொன்பாண்டிதான் காரணம் என எண்ணி கோபத்தில் குத்த வந்ததாக அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.