செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:12 IST)

10, 12 வகுப்புகளுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்தல் நடைபெறவில்லை என்பதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ள நிலையில் பொது தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது