1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. implementation of National Education Research case dismiss

தேசிய கல்வி பாடத்திட்டம்: வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

நீதிமன்றம்
தேசிய கல்வி பாடத் திட்டத்தை தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
கேரள ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட 44 கவுன்சிலர்கள்: என்ன நடக்குது நெல்லையில்?