1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (21:13 IST)

அமுதம் பல்பொருள் அங்காடியில் கொள்முதல் விலையில் தக்காளி, பருப்பு விற்பனை!

Tomato
சமீபத்தில் தக்காளி  விலை உயர்ந்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலையேற்றத்தைக் குறைக்க  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று   எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும்  கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசு இந்த விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு இன்று முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகளில் நாளை முதல் கொள்முதல் விலையில் பருப்பு, தக்காளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யவுள்ளது.

இதற்காக தமிழக உணவுத்துறை,  சென்னையில் உள்ள 14 பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதல் நியாய விலைக்கடைகளில் நாளை முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பும், மற்றும் தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை செய்ய  ஏற்பாடு செய்துள்ளது. அதில், தக்காளி 1 கிலோ ரூ.60கும் துவரம் பருப்பு 500கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500கிராம் ரூ60க்கும் விற்பனை செய்ய உணவுத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.