1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (10:06 IST)

சென்னையில் இடி மின்னலுடன் மழை.. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 8 விமானங்கள்

airport
சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை பெய்ததை அடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் எட்டு விமானங்கள் வானில் சில நிமிடம் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் நேற்று இரவு திடீரென இடி மின்னல் மற்றும் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரும் பாதிப்படைந்தன. 
 
லண்டன் மலேசியா சிங்கப்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட உள்நாட்டிலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் சில நிமிடங்கள் வானில் வட்டமடித்து அதன்  பின்னர் சில நிமிடங்கள் கழித்து தரையிறங்கின 
 
அதேபோல் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 12 விமானங்கள் 30 நிமிடம் முதல் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் தரையிறங்க வேண்டிய ஒரு சில விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva