1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (21:54 IST)

இரவு நேர பாடசாலையை தொடங்கும் நடிகர் விஜய்?

நடிகர் விஜய்,   ‘மக்கள் இயக்க’ நிர்வாகிகளுடன்  நேற்று சென்னை, பனையூரில் உள்ள மக்கள் இயக்கம் அலுவலகத்தில்  ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது.

அதன்படி,   நேற்று பனையூரில் உள்ள மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் செய்திருந்த நிலையில்,  மதியம் நடிகர் விஜய் அலுவலகத்திற்கு வந்து, சமீபத்தில் நடைபெற்ற  கல்வி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த  நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டியிருந்தார்.

சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில், இன்று, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன்  இன்று 2 வது நாளாக விஜய் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  ‘’வரும் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளில் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், ''ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம், விழியகம், குருதியகம், விருந்தகம் ஆகிய மக்கள் இயக்க நற்பணிகளைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில், இரவு நேர பாட சாலையை தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளதாக’’ தகவல் வெளியாகிறது.