திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (11:13 IST)

இல்லத்தரசிகளுக்கு ஊதிய திட்டம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த வாரம் மதுரை உள்பட தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று முதல் அவர் சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்னையில் உள்ள பல இடங்களில் அவர் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு பெரும்பாலான ஆதரவு இருந்தது என்பதும் அவரது பேச்சை கேட்க இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய பிரச்சாரத்தில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டுவரப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கூறிய கமல்ஹாசன், வறுமை இல்லாமல் செழுமையான மாநிலத்தை அமைப்பதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இளைஞர்களை தொழில் முனைவராக மாற்றுவதே எங்களது நோக்கம் என்றும் கமலஹாசன் கூறியதை அடுத்து அவரது பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது