சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார்: கமல்ஹாசன்

சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார்
siva| Last Updated: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (18:14 IST)
சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த வாரம் மதுரை உள்பட தென்மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் கூறிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையானது என்பதும் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே பதிலடி கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக முதல்வர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தெரிவித்ததும் அதற்கு கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்த பதிலடியும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியபோது ’சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்று உறுதி அளித்தார். மேலும் உப்பை சுவாசித்த மீனவர்களிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது
மேலும் இதுவரை மீனவர் ஒருவர் சட்டப்பேரவையில் இருப்பார் என்று எந்த அரசியல்வாதியும் கூறாத நிலையில் அதை கமலஹாசன் கூறியது புதுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல் கமல்ஹாசன் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :