செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (13:24 IST)

அர்ச்சனாவை வெளியே அனுப்பும் முன் வறுத்தெடுக்கும் கமல்ஹாசன்: பிக்பாஸ் 2வது புரோமோ

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று அர்ச்சனா வெளியேறப் போவதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இன்றைய இரண்டாம் புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது அதில் கோழி-நரி டாஸ்க்கில் அர்ச்சனா செய்ததை கமல்ஹாசன் கேலியும் கிண்டலும் செய்கிறார்
 
தனது படம் இருந்த முட்டையை சோம் உடைத்ததாக அவர் மீது கோபப்பட்டது குறித்து கமல்ஹாசன் அர்ச்சனாவிடம் கேட்டப்போது அவர் கூறிய பதிலை அடுத்து, ஏற்கனவே போட்டியாளர்களின் புகைப்படத்தை எரித்து இருக்கின்றோம். அப்போதெல்லாம் கோபப்படவில்லை, இதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள் என்று அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சுற்றிக் காட்டினார்
 
கமல்ஹாசனின் கிண்டல் புரிந்தாலும் சிரித்துக்கொண்டே மழுப்பிய அர்ச்சனாவை விடாமல் அந்த டாஸ்க் குறித்து கமல் கேட்டு கொண்டே இருந்ததால் அர்ச்சனாவின் முகம் சுருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று வெளியேற போகும் அர்ச்சனாவை ஒரு வழி செய்து விட்டு தான் கமலஹாசன் வெளியேற்றுவார் என்று கூறப்படுகிறது