திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (18:34 IST)

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: எவ்வளவு தெரியுமா?

tasmac
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 டாஸ்மாக் நிறுவனத்தின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என்று பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 
 
இந்த ஊதிய உயர்வால் ஆண்டொன்றுக்கு ரூ.16.67 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
 
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து  விற்பனை பணியாளர்கள்,மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.