நிலவில் தெரிந்தது சாய்பாபா முகமா? சென்னையில் பரபரப்பு
சென்னையில் நேற்றிரவு பலர் வானத்தை பார்த்து நிலாவை நோக்கி கும்பிடு போட்டு கொண்டிருந்ததை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்திருப்பர். நிலாவில் நேற்றிரவு சாய்பாபாவின் முகம் தோன்றியதாக வாட்ஸ்-அப்பில் பரவிய செய்தியின் விளைவுதான் இது
நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை முதல் ஒபாவின் முகம் தெரிந்தது வரை பல வதந்திகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரிந்ததாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது. இதனையடுத்து சென்னையில் பலர் வீட்டிற்கு வெளியே வந்து நிலாவை பார்த்து கும்பிட்ட வண்ணம் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஒருசிலர் கருத்து கூறியபோது, தங்களுக்கு பிடித்த கடவுளை மனத்தில் நினைத்துக்கொண்டு நிலவை பார்த்தால், அவர்களின் உருவம் நிலவில் இருப்பது போல் தெரியும் என்று விளக்கம் அளித்தனர்.