1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (13:58 IST)

சாகித்ய அகாடமி விருதுகள்..! 'விஷ்ணு வந்தார்' புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு விருது..!!

Awards
சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு, விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பால புரஸ்கார் விருதுக்கு, 'தன்வியின் பிறந்த நாள்' கதைத் தொகுப்பு எழுதிய யூமா வாசுகி தேர்வாகி உள்ளார்.
 
2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுகள் 23 மொழிகளில் வந்த படைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, அசாமி, பெங்காலிம் ஆங்கிலம், குஜராத்தி உள்ளிட்ட மொழி படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருதுகள் வென்ற எழுத்தாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
‘விஷ்ணு வந்தார்’ புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன் தனது முதல் சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய விருது பெற்றுள்ளார்.
 
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்தநாள்’ புத்தகத்தை எழுதிய யூமா வாசுகிக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு யூமா வாசுகி பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 
யூமா வாசுகி என்ற புனைப்பெயரில் கவிதை, கதை எழுதி வருபவரின் இயற்பெயர் மாரிமுத்து. ’கசாக்கின் இதிகாசம்’ என்ற மொழிப்பெயர்ப்புக்கு கடந்த 2017ம் ஆண்டு சாகித்ய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.