திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (11:51 IST)

சென்னை மெட்ரோ மேம்பால தூண்களில் விளம்பர பலகை.. வருவாய் ஈட்ட புதிய திட்டம்..!

சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
மீனம்பாக்கம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு மெட்ரோ வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகள் Mudra Ventures நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
 
அதேபோல் புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே சென்னை மெட்ரோ   ரயில்களில் அதிக பயணிகள் பயணம் செய்து வருவதால் நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேம்பாலங்களில் விளம்பர பலகை வைக்க அனுமதிக்கப்படும் பட்சத்தில் கூடுதல் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran