திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (14:07 IST)

”அது போலீஸாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அல்ல, ஏபிவிபி சந்திப்பு” ஜே.என்.யு. மாணவர்கள் குற்றச்சாட்டு

ஜே.என்.யு. மாணவர்கள் நடத்திய தாக்கல் குறித்த டெல்லி போலீஸாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏபிவிபி அமைப்பின் சந்திப்பாகவே இருந்தது என அப்பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாணவர்கள் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை கொண்டு கொடூரமாக தாக்கினர், இதில் மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யு. மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தது ஒரு புறம் பாராட்டுகளையும், மறு புறம் விமர்சனங்களையும் பெற்றது. மேலும் டிவிங்கிள் கண்ணா, அனுராக் கஷ்யாப் போன்ற பிரபலங்களும் இத்தாகுதல் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் , ”இத்தாக்குதல் தொடர்பாக காவல் துறையினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஏபிவிபி அமைப்பின் சந்திப்பாகவே இருந்தது, பல்கலைக்கழகத்தில் ஒரு கும்பல் சுற்றி வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் அதனை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை” என குற்றம் சாட்டியுள்ளனர்.

இத்தாக்குதல் குறித்த சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷும் உள்ளார். மேலும் தாக்குதல் அன்று உருவாக்கப்பட்ட ”UNITY AGAINST LEFT” (இடது சாரிக்கு எதிரான ஒற்றுமை) என்ற குரூப்பிலிருந்த மாணவர்களின் 37 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளதாம்.