அமைச்சரின் தாமதத்தால் 5 மணி நேரம் காத்திருந்த பிரியாணி பிரியர்கள்

biriyani
அமைச்சரின் தாமதத்தால் 5 மணி நேரம் காத்திருந்த பிரியாணி பிரியர்கள்
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (22:52 IST)
அமைச்சரின் தாமதத்தால் பிரியாணி சாப்பிடுவதற்காக 5 மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்த சம்பவம் மதுரை அருகே நடந்துள்ளது.
மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னதான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். இதனை அடுத்து சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக மணக்க மணக்க பிரியாணிகள் சுடச்சுட இருந்தது

இந்த நிலையில் பிரியாணி வழங்கும் அன்னதானம் நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்வி உதயகுமார் காலை 9 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர் ஆனால் சரியான நேரத்துக்கு அமைச்சர் வரவில்லை. மதியம் 12 மணி அளவில் தான் அவர் கிளம்பியதாக தகவல் வந்தது.
இதனால் அன்னதானம் மேசைமீது இலை போடப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டு சுமார் 5 மணி நேரம் சாப்பிடுவதற்காக அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள் காத்திருந்தனர். கடைசியில் 9 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய அன்னதான நிகழ்ச்சி 5 மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தது. அமைச்சர் ஆர்வி உதயகுமார் வந்ததும் அவசர அவசரமாக விழா ஐந்தே நிமிடத்தில் விழா முடிக்கப்பட்டு அதன் பின்னர் உணவு பரிமாறப்பட்டது காலை 9 மணிக்கே பரிமாறினால் சுடச்சுட சாப்பிட்டு இருக்கலாம் என்றும் ஆனால் ஐந்து மணி நேரம் தாமதம் ஆனதால் உணவின் சுவை குறைந்து விட்டதாகவும் அன்னதானத்தில் சாப்பிட்டவர்கள் கருத்து கூறியதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :