விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை புதுச்சேரி அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
வரும் 18ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருக்கும் நிலையில் புதுச்சேரி அரசு விநாயகர் சதுர்த்திற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருவன:
1. விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்படும் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், குறைந்த உயரத்திலும் இயற்கையான பொருட்களைக் கொண்டும் தயாரித்திருக்க வேண்டும்;
2. ரசாயனம் பூசிய வர்ணங்களை பயன்படுத்தக் கூடாது, ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது;
3. சிலைகளை உருவாக்க நச்சு மட்டும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்"
Edited by Siva