வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (21:27 IST)

காவிரி உபரிநீர் வர ஏற்பாடு செய்ய நடவடிக்கை...அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி

கரூர் அருகே தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்ததோடு, இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வரை சந்தித்து விரைவில் காவிரி உபரிநீர் வர ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பஞ்சப்பட்டி ஏரியானது, கடந்த 17 ஆண்டாக வறண்டு கிடக்கும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரியை தூர்வாரி நீர் நிரப்பி விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
 
தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியாகவும், 1.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கக் கூடியது. மேலும், இந்த  கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டி ஏரி. 1837-இல் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் கடவூர் ஜமீன்தாரின் ஆளுகைக்குள்பட்டிருந்த கடவூர் மலைப்பிரதேசம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் வனப் பிரதேசங்களில் இருந்து ஓடி வரும் காட்டாற்று வெள்ள நீரை சேமித்து வைக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டது. 
 
1,217 ஏக்கர் பரப்பளவு, 44 மீ. உயரம் கொண்டிருக்கும் இந்த ஏரிக்கரையின் நீளம் 2,050, அகலம் 5 மீட்டராகும். மழைக் காலங்களில் மலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் மழைநீர் பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி வழியாக அப்பகுதிகளில் உள்ள 24 ஏரிகள், 124 குளங்களை நிரப்பிய பின் கடைசியாக உபரி நீர் பஞ்சப்பட்டி ஏரிக்கு வரும். ஆனால் இந்த ஏரியை கடந்த 17 ஆண்டுகாலமாக தூர்வாராமல், கிடப்பில் போட்ட நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அங்குள்ள விவசாயிகளிடம், முதல்வரிடத்தில் இந்த பிரச்சினையை எடுத்து சொல்லி, விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தார். 
 
இந்நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.